/ஹைப்போ தைராய்டிசத்திற்கான இயற்கை முறையிலான 15 சிகிச்சைகள்!!!

ஹைப்போ தைராய்டிசத்திற்கான இயற்கை முறையிலான 15 சிகிச்சைகள்!!!

கழுத்துக்குக் கீழ், பட்டாம்பூச்சி வடிவில் உள்ள சுரப்பி தான் தைராய்டு. இது ஆற்றல் மற்றும் மெட்டபாலிசத்தின் முதன்மை சுரப்பியாகும். மரபணுவை தூண்டி, உடம்பில் உள்ள அணுக்கள் அதன் வேலையை செய்யவும் உந்துதலாக இருக்கிறது.

ஹைப்போ தைராய்டிசம் அல்லது குறைந்த அளவிலான தைராய்டு என்பது சத்தமில்லாமல் கொல்லும் ஒரு நோயாகும். இந்த நோயின் அறிகுறிகள் பல வருடங்களாக இருந்தாலும், எதனால் இந்த அறிகுறிகள் இருக்கிறது என்று மரபு சார்ந்த மருத்துவ அமைப்புகளால் கூட கண்டறிய முடியவில்லை. ஏனென்றால் இந்த கோளாறு பரந்து விரிந்ததாகவும், தெளிவற்றதாகவும் இருக்கிறது. மேலும் இதற்கு ஒழுங்கான மருந்துகளும் இல்லை.

மேலும் இதில் மோசமானது என்னவென்றால், பல சமயங்களில் ஹைப்போ தைராய்டிசம், தைராய்டு நாளத்தினால் உண்டாவதில்லை. அது உடம்பில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பினால் உண்டாகிறது. ஆனால் இது தெரியாமல் பல மருத்துவர்கள் முதலில் ஆன்டிபாடிகளில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியை பரிசோதிப்பதில்லை.

எனவே தைராய்டு நோய் அல்லது ஏதாவது நோயெதிர்ப்பு நிலையை குணப்படுத்த, முதலில் சமமின்மையின் மூலத்தை கண்டறிய வேண்டும். மேலும் இந்த நோய்க்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த, அந்த நேரத்திற்கு ஏதாவது மருந்தை பயன்படுத்துவது தவறானது.

எனவே ஹைப்போ தைராய்டு நோயை குணப்படுத்துவதற்கு, முதலில் உணவு வழக்கத்தில் மாற்றங்களை கொண்டு வருவதே சிறந்த வழி. ஹைப்போதைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படும். அது அவர்களை சத்துக் குறைவான இனிப்பு மற்றும் காஃப்பைன் கலந்த பொருட்களை உண்ணத் தூண்டும். இருப்பினும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.

இப்போது இந்த ஹைப்போ தைராய்டிசத்திலிருந்து எளிதில் விடுபடுவதற்கான இயற்கை வழிகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

காஃப்பைன் மற்றும் சர்க்கரையை தவிர்த்தல்

காஃப்பைன் மற்றும் சர்க்கரையை பெருமளவு குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாவு போன்ற தூய்மைப்படுத்திய கார்போஹைட்ரேட்டுகளையும் சேர்த்து தான். ஏனென்றால் நம் உடம்பு அதை சர்க்கரை போலத் தான் எடுத்துக் கொள்ளும். ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளை உண்ணுவது மிகவும் நல்லது.

புரதச்சத்தை கூட்டுங்கள்

புரதச்சத்து தைராய்டு ஹார்மோன்களை அனைத்து தசைகளுக்கும் எடுத்து செல்வதால், இது தைராய்டு செயலை சீராக வைக்க உதவும். பருப்பு வகைகள், ஹார்மோன் மற்றும் நுண்ணுயிர் கொல்லியில்லாத இறைச்சிப் பொருட்கள் மற்றும் பயறு வகைகளில் புரதச்சத்து உள்ளது.

தேவையான கொழுப்புச்சத்தை சேர்த்தல்

நல்ல கொழுப்புச் சத்து நம் நண்பன்; அதே போல் கெட்ட கொழுப்புச் சத்து உடம்பின் ஹார்மோன் சீர்கேடுகளுக்கு முன்னோடியாக விளங்கும். தேவையான அளவு கொழுப்புச் சத்து, உடம்பில் இல்லாமல் போனால் ஹார்மோன் சமமின்மை உண்டாகிவிடும். அதில் தைராய்டு ஹார்மோன்களும் அடங்கும். ஆகவே இயற்கையான கொழுப்புச் சத்துள்ள பொருட்களான ஆலிவ் எண்ணெய், நெய், வெண்ணைப் பழம், ஆளி விதை, மீன், பருப்பு வகைகள், ஹார்மோன் மற்றும் நுண்ணுயிர் கொல்லியில்லாத பாலாடைக்கட்டி, தயிர், தேங்காய் பாலால் செய்த பொருட்களை உண்ணுதல் மிகவும் நல்லது.

ஊட்டச்சத்தை கூட்டுதல்

ஊட்டச்சத்தின் குறைப்பாட்டினால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுவதில்லை. இருப்பினும் இந்த நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமங்களின் குறைப்பாடு இருந்தால், வைட்டமின் D, இரும்புச் சத்து, ஒமேகா-3 கொழுப்பமிலம், செலினியம், ஜிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் அயோடின் போன்றவைகளின் குறைப்பாடும் ஏற்படும்:

அயோடின் உணவுகள்

அயோடின் பற்றாக்குறையால் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படுகிறது என்று பரவலாக நம்பப்படுகிறது. அயோடினின் முதன்மை மூலமாக விளங்குபவைகள்: கடல் காய்கறிகள் மற்றும் கடல் உணவுகள். அயோடினின் இரண்டாம் நிலை மூலமாக விளங்குபவைகள்: முட்டைகள், அஸ்பாரகஸ், பீன்ஸ், காளான், கீரை வகைகள், எள்ளு விதைகள் மற்றும் பூண்டு.

ஒமேகா-3

மீன், புல் தின்னும் விலங்கின பொருட்கள், ஆளி விதை மற்றும் வால்நட்களில் ஒமேகா-3 இருக்கிறது. இது தடுப்பாற்றல் செயலை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களையும், அணுக்களை வளர்க்கும் ஹார்மோன்களையும் வளப்படுத்த உதவும். இந்த ஹார்மோன்கள் தான் தைராய்டு செயல்பாடுகளுக்கு முக்கியமானதாகும்.

100 சதவீதமாக பசைப் பொருட்களிலிருந்து விலகவும்

தைராய்டு தசைகளின் மூலக்கூற்றுக்குரிய கலவைப் பொருட்கள் பசைப் பொருளை போன்றதே. ஆகவே பசைப் போன்ற பொருட்களை உண்ணுவதால், தன்னுடல் தாங்குதிறன் தைராய்டு சுரப்பயை தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

தைராய்டு வீக்க நோய்க் காரணிகளாக விளங்கும் உணவு வகைகள்

தைராய்டு வீக்க நோய்க் காரணிகளாக விளங்கும் உணவு வகைகள், தைராய்டு செயல்களில் வெகுவாக தலையிடும். எனவே அப்படிப்பட்ட பொருட்களை மனதில் வைத்துக் கொண்டு தவிர்க்கவும். பச்சைப் பூக்கோசு, களைக்கோசு, முட்டைக்கோசு, காலிஃப்ளவர், பரட்டைக்கீரை, நூல்கோல், சிறுதானியம், கீரை வகைகள், ஸ்ட்ராபெர்ரிகள், பீச், கடலை பருப்பு, முள்ளங்கி மற்றும் சோயா பீன்ஸ் போன்றவைகள் தான் அந்த வகை உணவுகளின் உதாரணங்கள்.

குளுதாதயோனை நாடுங்கள்

குளுதாதயோன் என்பது சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத்தடுப்பானாக விளங்குகிறது. எனவே இது நோய் தடுப்பாற்றல் அமைப்பை வலுப்படுத்தும். மேலும் தைராய்டு தசைகளை பாதுகாக்கவும், குணப்படுத்தவும் செய்யும்.

சில உணவு வகைகளில் குளுதாதயோன் இருந்தாலும், அது நம் உடம்பிலும் சுரக்கிறது. அஸ்பாரகஸ், பச்சைப் பூக்கோசு, பீச், வெண்ணைப் பழம், கீரை வகைகள், பூண்டு, பப்பளிமாஸ் மற்றும் பச்சை முட்டைகளில் குளுதாதயோன் உள்ளது.

ஒத்துவராத உணவை தள்ளி வையுங்கள்

எப்போதும் உடலும் சேராத உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். எப்படி ஹஷிமோட்டோ என்ற தைராய்டு நோயினால் நம் உடம்பு தாக்கப்படுகிறதோ, சில வகையான உணவுகளை உண்ணுவதாலும், இந்த நிலை ஏற்படும். அப்படிப்பட்ட உணவை தவிர்ப்பது நல்லது.

கட் (gut) சோதனையை செய்து கொள்ளுங்கள்

20 சதவீதனமான தைராய்டு செயல்பாடு. சத்துள்ள கட் பாக்டீரியாவின் அளவை பொறுத்தே அமையும். அதே போல் ப்ரோபயோடிக்ஸ் (probiotics) என்ற குடல் சம்பந்த பாக்டீரியாவாலும் நன்மை உண்டாகும்.

அமைதியாக ஏற்படும் அழற்சி

ஒட்டு மொத்த ஊட்டச்சத்து உணவுகளால் அமைதியாக ஏற்படும் அழற்சியை முன்னிறுத்த மறக்காதீர்கள். ஊடுருவிச் செல்லும் அழற்சியும். தன் தடுப்பாற்றலும் கைக்கோர்த்து செல்லும்

சிறுநீரகச் சுரப்பி அயர்ச்சி அடைவதை முன்னிறுத்துங்கள்:

தைராய்டுக்கும் சிறுநீரகச் சுரப்பிகளுக்கும் உன்னத தொடர்பு உண்டு. ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், நிச்சயம் சிறிதளவாவது சிறுநீரகச் சுரப்பி அயர்ச்சி இருக்கும்.

மன அழுத்தத்தை கவனியுங்கள்

தைராய்டு மிகவும் உணர்ச்சியுள்ள சுரப்பி. எனவே அது மன அழுத்தம் ஏற்பட்டால் உடனே பாதிக்கப்படும்.

தைராய்டு காலரை கேட்டு வாங்குங்கள்

தைராய்டு, கதிர் வீச்சுடன் நேரடி தொடர்பில் உள்ளது. எனவே அடுத்த முறை எக்ஸ்-ரே எடுக்கும் போது, மருத்துவரிடம் தைராய்டு காலரைப் கேட்டு வாங்குங்கள்.

Loading...