/அரியலூர் அனிதா MBBS வாழ்கை வரலாற்றில் நடிக்கும் ஜூலி- வீடியோ

அரியலூர் அனிதா MBBS வாழ்கை வரலாற்றில் நடிக்கும் ஜூலி- வீடியோ

நீட் தேர்வால் மருத்துவக் கனவு கலைந்து போனதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவர் வாழ்க்கை வரலாறு டாக்டர் எஸ். அனிதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் படமாகிறது. இது குறித்து ஜூலியின் அறிவிப்பை பார்த்த நெட்டிசன்கள் கோபம் அடைந்துள்ளனர்.

அனிதா கதாபாத்திரத்தில் ஜூலி நடிக்கவே கூடாது என்று நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இந்த படத்தில் ஜூலியை போய் ஹீரோயினாக நடிக்க வைப்பதா என்று கேட்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஜூலி பொய் பேசியதை நெட்டிசன்கள் இன்னும் மறக்கவில்லை. அதில் இருந்து அவரை போலி என்றே கூறுகிறார்கள்.

தாமரையால் சாகடிக்கப்பட்ட அனிதா பற்றிய பட போஸ்டரில் தாமரை இருப்பதா என்று கூறி ஒருவர் கொந்தளித்துள்ளார்.

அனிதா பற்றிய படம் குறித்த அறிவிப்பை பார்த்த ஒருவர் என்ன கொடுமை இது என்று ட்வீட்டியுள்ளார்.

Loading...